/ Tamil Pulvarkal
/ ஒக்கூர் …
ஒக்கூர் மாசாத்தனார்
-
- இவர் செய்யுளிற் கணவனை யிழந்த மகளிர் புல்லரசிக் கூழை அகாலத்திலுண்டு கைம்மைநோன்பு நோற்றிருத்தல் கூறப்பெற்றுள்ளது. இப்பெயர் எக்கூர் மாசாத்தனா ரென்றும் சில பிரதிகளிற் காணப்படுகின்றது. இவர் இயற்றியதாக அகநானூற்றில் ஒரு செய்யுள் (14) உள்ளது.
ஒக்கூர் மாசாத்தியார்
- இவர் பெண்பாலார். இவர் செய்யுளில் ஒரு மறக்குடிமகளின் வீரச்செயல் விசேடித்துப் பாராட்டப்பெற்றுள்ளது. இவர் பாடல்கள் முல்லைத்திணையைப் பற்றி வருவன. ஒக்கூர் என்பது பாண்டி நாட்டில் திருக்கோஷ்டியூர்ப் புறத்தேயுள்ள ஓர் ஊர். இவர் செய்தனவாகக் கிடைத்த பாடல்கள் - 9 : அகநா. 3; குறுந். 5; புறநா. 1.