/ Tamil Pulvarkal
/ ஒளவையார்
ஒளவையார்
- இவர் அதியமான் நெடுமானஞ்சியிடம் அமுதமயமாகிய நெல்லிக்கனி பெற்று அவனைப் புகழ்ந்தார். இவர் அக்கனியைப் பெற்றமை இந்நூல் 91-ஆம் பாட்டினாலும், “பூங்கமல வாவிசூழ் புல் வேளூர்ப் பூதனையும், ஆங்குவரும் பாற்பெண்ணை யாற்றினையும் - ஈங்கே, மறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றி னாவை, அறுப்பித்தா யாமலகந் தந்து” என்னும் வெண்பாவாலும், 100-ஆம் திருக்குறளுக்குப் பரிமேலழகர், ‘இனியகனிகளென்றது ஒளவையுண்ட நெல்லிக்கனி போல் அமிழ்தாவனவற்றை’ என்று எழுதிய விசேடவுரையாலும் வெளியாகின்றது. இவராற் பாடப்பட்டோர் : அதியமான் நெடுமானஞ்சி, தொண்டைமான், அதியமான்மகன் பொகுட்டெழினி, நாஞ்சில் வள்ளுவன், சேரமான் மாவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில்கடந்த உக்கிரப்பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியென்பார். இவரியற்றிய பாடல்கள் புறநானூற்றிலன்றி. நற்றிணையிலும், குறுந்தொகையிலும், அகநானூற்றிலும், புறநானூற்றிலும், தொல்காப்பிய உரையிலும், யாப்பருங்கலவிருத்தியுரை முதலியவற்றிலும் காணப்படுகின்றன. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, அசதிக்கோவை முதலியன இவரியற்றிய நூல்களென்பர். இவர் அவ்வச்சமயத்துச் செய்தனவாகவுள்ள தனிப்பாடல்கள் மிகப் பல. பகைவரை நோக்கிக் கூறுவார்போல, அதியமான் நெடுமானஞ்சியின் குணங்களை இவர் பாராட்டிக் கூறியிருக்கும் பகுதிகளும் அவனால் தூதனுப்பப்பட்டுச்
- சென்றபொழுது தன் மேம்பாட்டைப் புலப்படுத்தற் பொருட்டுத் தொண்டைமான் தன் படைக்கலக்கொட்டிலைக் காட்டக் கண்டு அப்படைக்கலங்களைப் புகழ்வார்போல அதியமானது போர்த் திறத்தை வெளிப்படுத்தியிருக்கும் பகுதியும் மிக்க விம்மிதத்தை விளைவிக்கும். அதியமான் கோவலுாரெறிந்ததனைப் பரணர் பாடியதையும் (புறநா. 96) , மூவேந்தரும் சேனைகளுடன் பாரியை வெல்லக் கருதி அவன் நகரைச் சூழ்ந்து புகல்போக்கின்றித் தடுத்தபோது பறவைகளால் நெற்கதிரைப் புறத்திருந்து வருவித்து உள் நகரத்தாரைப் பசியால் வருந்தாதபடி பாதுகாத்தளித்த கபிலர் செய்தியையும் (அகநா. 303) பிரிவாற்றாது வருந்திய வெள்ளிவீதியார் என்னும் புலமைவாய்ந்த பெண்பாலாருடைய துன்பமிகுதியையும் (அகநா. 147) புலப்படுத்தியிருத்தல் புலவரிடத்து இவருக்குள்ள பேரன்பை விளக்குகின்றது; பழையனூர்க் காரிக்காகச் சென்று ஆடொன்று கேட்டபோது சேரன் இவருடைய மேம்பாட்டை நினைந்து, பொன்னால் ஓர் ஆடு செய்வித்து அளிக்க, இவர் அதனைப்பெற்று மனமகிழ்ந்து, “சேரா! உன்னாடு பொன்னாடு (உன் நாடு பொன் நாடு) ” என்று கூறினாரென்றும் அதனால் மலைநாடு இதுகாறும் சிறப்புற்று விளங்குகிறதென்றும் ஒரு செய்தி வழங்குகிறது. தம்முடைய கூற்றாகவன்றிப் பாடியிரத்தற்குரிய விறலி முதலியவர்களின் கூற்றுக்களாகவும் இவர் பாடிய பாடல்கள் இந்நூலிலும் பிறநூல்களிலும் காணப்படும். ஆராய்வோர், அதனைக்கொண்டு இவரை விறலி முதலியவர்களாக நினைந்து விரைந்து முடிவுசெய்து விடுதல் மரபன்று; அங்ஙனம் பாடுதல் கவிமதமெனக் கொள்ளுதல் முறை; பிறபுலவர்கள் பாடல்களிலும் இம்முறை காணப்படும். தொகைநுால்களில் இவர் பெயர் ஒளவையெனவும் வழங்கும்.