/ Tamil Pulvarkal
/ வல்வில் ஓரி
வல்வில் ஓரி
-
- இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்; கொல்லி மலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன்; “காரிக்குதிரைக் காரியொடு மலைந்த, ஓரிக் குதிரை யோரியும்” எனக் சிறுபாணாற்றுப் படையிலும் இவனைப் புகழ்ந்து கூறினர். இவன் பெயர் ஆதனோரி யெனவும் வழங்கும். இவனைப் பாடிய புலவர்கள்: வன்பரணர், கழைதின் யானையார்.