/ Tamil Pulvarkal / ஓரேருழவர்

ஓரேருழவர்

  • வினைமுற்றி மீளும் தலைமகன் தலைமகளைக் காண்டற்கு விரையும் தன் நெஞ்சிற்கு ஈரச்செவ்வியில் விதைவிதைத்தற் பொருட்டுக் கொல்லையை அடைதற்கு விரையும் ஓரேருழவனை உவமை கூறிய சிறப்பால் இவர் இப்பெயர் பெற்றனர்; “ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோட், பேரமர்க் கண்ணி யிருந்த வூரே, நெடுஞ்சேணாரிடை யதுவே நெஞ்சே, ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத், தோரேருழவன் போலப், பெருவிதுப் புற்றன்றா னோகோ யானே” (குறுந். 131) என்பதனால் உணர்க. இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. தம்முடைய செய்யுளில் இல்லறத்தை வெறுத்துக் கூறுதலின், இவர் துறவறத்தில் விருப்புடையாரென்று சொல்ல இடமுண்டு. இந்நூலில் இவர் இயற்றிய செய்யுள் : 193.