/ Tamil Pulvarkal / கண்ணகி

கண்ணகி

  • இவள் வையாவிக்கோப் பெரும்பேகனுக்குரியவள்: ஒருகாலத்து அவனால் துறக்கப்பட்டுப் பிரிவாற்றாது வருந்திக் கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழாரென்பவர்கள் தன்னை அவனோடு சேர்த்து வைத்தற்கு அவனைப் பாடி வேண்டும்படி பெருமையுற்றவள்; ‘கண்ணகி காரணமாக வையாவிக்கோப் பெரும்பேகனைப் பரணர்பாடிய கைக்கிளைவகைப் பாடாண்பாட்டு” (தொல். புறத்திணை. சூ. 35, ந.) என்பதனாலும் இது விளங்குகின்றது. இவள் சிலப்பதிகாரத்துக் கூறப்பட்டுள்ள கண்ணகியல்லள்.