/ Tamil Pulvarkal
/ கருவூர்ப் …
கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்
- சதுக்கம் - நான்கு தெருக்கள் கூடுமிடம்; அங்கேயுள்ள தெய்வமாகிய ஒரு பூதத்தின் பெயர் இவருக்கு எய்தியதுபோலும்; கருவூரிற் சதுக்கப்பூதமொன்றிருந்தமை, “சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து, மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும்” (சிலப். 28 : 147-8) என்பதனால் அறியலாகும்; வஞ்சி - கருவூர். முசுகுந்தனுக்குத் துணையாக இந்திரனால் அனுப்பப்பட்ட பூதமொன்று காவிரிப்பூம்பட்டினத்திற் சதுக்கத்திலிருந்து அந்நகரைப் பாதுகாத்துவந்ததாகச் சிலப்பதிகார முதலியன தெரிவிக்கின்றன. துறவுபூண்டிருந்த கோப்பெருஞ்சோழனை நோக்கி மனமுருகிப் பாடியவர்களுள் இவர் ஒருவர்.