/ Tamil Pulvarkal
/ கள்ளில் …
கள்ளில் ஆத்திரையனார்
- கள்ளில் என்பது தொண்டை நாட்டி லுள்ளதும் ஸ்ரீ ஞானசம்பந்தர் தேவாரம் பெற்றதுமான ஒரு சிவஸ்தலம். ஆத்திரையன் - அத்திரிகுலத்திற் பிறந்தவன்; இவரது இப்பெயர் குடிப்பெயர்; இதனால் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்: நன்றியறிவு முதலிய உத்தம குணத்தினர். இவராற் பாடப்பட்டோர்: வேங்கடமலைக்குரிய தலைவனாகிய ஆதனுங்கனும், ஆதியருமனுமாவர். இவர் செய்த பாடல்கள் - 3 : குறுந். 1 ; புறநா. 2.