/ Tamil Pulvarkal
/ கழாத்தலையார்
கழாத்தலையார்
- கழாத்தலை : ஓரூர், சேரமான்குடக்கோநெடுஞ் சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியும் போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்து இறந்தது கண்டு இவர் மனம்வருந்திப் பாடினர்; இருங்கோவேளின் முன்னோரில் ஒருவன் இவரை இகழ்ந்தமையால் அவனது நகரமாகிய அரையமென்பது அழிவுற்றதென்று கபிலர் பாடியிருத்தலின், இவர் மேம்பாடு விளங்குகின்றது; 202; அன்றியும் கபிலருக்கு இவர் காலத்தால் முற்பட்டவரென்று தெரிகிறது. இவர் கூறும் உவமைகள் அழகுவாய்ந்தவை; இவராற் பாடப்பட்டோர் மேற்கூறிய அரசரும் சேரமான்பெருஞ்சேரலாத னுமாவர்.