/ Tamil Pulvarkal / கானப்பேரெயில்கட …

கானப்பேரெயில்கடந்தஉக்கிரப்பெருவழுதி

  • இவன், சேரமான் மாவெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி யென்பவர் களுடைய நண்பன்; கடைச்சங்கமிரீஇய பாண்டியர் நாற்பத்தொன்பதின்மருள் ஒருவன்; இதனை இறையனாரகப்பொருளுரையாலும் சிலப்பதிகார வுரையாலும் உணர்க. இவன் முன்னிலையில் திருக்குறள் அரங்கேற்றப் பட்டதென்ற செய்தி, அக்குறளுக்கு இவன் கொடுத்த, “நான்மறையின் மெய்ப்பொருளை” என்னும் வெண்பாவிற் காணப்படுகிறது; எட்டுத்தொகையுள் அகநானூற்றைத் தொகுப்பித்தோன் இவனே. “புலவரையிறந்த” என்னும் புறப்பாட்டால், வேங்கைமார்பனென்னும் பகைவனை வென்று அவன் ஆட்சியிலிருந்த பல சிற்றரண்களையுடைய கானப்பேரரணைக் கைக்கொண்டானென்று விளங்குகின்றது; இவன்பெயர், பாண்டியன் உக்கிரப்பெருவழுதி யெனவும், உக்கிரப்பெருவழுதி யெனவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி யெனவும் வழங்கும். இவனைப் பாடிய புலவர்: ஐயூர் மூலங்கிழார், ஒளவையார்.