/ Tamil Pulvarkal / வேம்பற்றூர்க் …

வேம்பற்றூர்க் குமரனார்

    • வேம்பற்றூரென்பது மதுரைக்குக் கிழக்கேயுள்ள தோரூர்; வேம்பத்தூரென இக்காலத்து வழங்கும்; குலசேகரசதுர்வேதிமங்கல மென்றும் இதனுக்கு ஒரு பெயருண்டென்று சிலாசாசனத்தால் தெரிகிறது. கடைச்சங்கப் புலவர் காலந் தொடங்கி இன்றுவரை அந்தணர்களே தமிழ்ப்புலவர்களாக இவ்வூரில் விளங்கியிருத்தல் கண்கூடாதலாலும், பெயராலும் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்.