/ Tamil Pulvarkal
/ குளமுற்றத்துத் …
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
-
- இவன் குளமுற்றமென்னும் இடத்தில் இறந்ததுபற்றி இப்பெயர் பெற்றான்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
- இவனது இராசதானி உறையூர்; மிக்க கொடையும் வீரமும் உடையோன். செய்யுள் செய்தலில் வல்லவன்; கருவூரை முற்றுகைசெய்து சேரனை வென்றவன்.‘ இவனைப் பாடிய புலவர்கள்: ஆலத்தூர்கிழார், மாறோக்கத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார், ஆடுதுறை மாசாத்தனார், ஐயூர் முடவனார், கோவூர்கிழார், நல்லிறையனார், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், வெள்ளைக்குடி நாகனார்; இவருள், இவன் இறந்த பின்பும் இருந்து பிரிவாற்றாது வருந்தியவர்கள்: மறோக்கத்து நப்பசலையார், ஐயூர்முடவனார், ஆடுதுறை மாசாத்தனார்.