/ Tamil Pulvarkal
/ கூடலுார்கிழார்
கூடலுார்கிழார்
- இவர் மலைநாட்டின் கண்ணதாகிய கூடலுாரை இருப்பிடமாக உடையவர் ; வேளாண்மரபினர் ; இவருடைய பாடல்கள் இன்சுவையைத் தருபவை ; ஒரு விண்மீன் வீழ்ச்சியைக் கண்டு கோச் சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை என்னும் அரசன் இன்னநாளில் இறப்பானென்று முதலில் நிச்சயித்திருந்து அவ்வாறே அவன் இறந்ததுகண்டு ஒருவாற்றானும் பிரிவாற்றாது வருந தினாரென்று, “ஆடியலழற்குட்டத்து” (229) என்னும் பாடலாலும் அதன் பின்னுள்ள வாக்கியங்களாலும் தெரிதலால், இவர் கணிதத்திலும் வல்லவராகக் கருதப்படுகிறார்; இவர் மேற்கூறிய அரசனால் மிக ஆதரிக்கப் பெற்றவர்; அவன் வேண்டுகோளால் ஐங்குறுநூறென்னும் தொகை நூலைத் தொகுத்தவர் இவரே; ஐங்குறுநூற்றின் இறுதி வாக்கியத்தில் ‘புலத்துறை முற்றிய கூடலுார் கிழார்’ என ஆன்றோராற் சிறப்பித்துக் கூறப் பெற்றிருத்தலின், இவருடைய பெரும்புலமை நன்கு வெளியாகின்றது. இவர் காலத்துப்புலவர்கள் குறுங்கோழியூர்கிழார், பொருந்தில் இளங்கீரனார் என்பவர்கள். முதுமொழிக்காஞ்சியை இயற்றிய மதுரைக்கூடலுார் கிழார் என்பவர் வேறு; இவர் வேறு. இவரியற்றிய பாடல்கள் - 4: குறுந். 3; புறநா. 1.