/ Tamil Pulvarkal / கோதமனார்

கோதமனார்

  • இவர் பெயர் கௌதமனாரெனவும், பாலைக் கௌதம னாரெனவும் வழங்கும்; இவர் அந்தணர். பதிற்றுப்பத்தில் 3-ஆம் பத்தைப் பாடி இவர் இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனாற் சுவர்க்கம் பெற்றார்; இதனை, “பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடினார். பத்துப்பாட்டு…பாடிப் பெற்ற பரிசில் : ‘நீர் வேண்டியது கொண்மின்’ என, ‘யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகவேண்டும்’ என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டுப் பெருவேள்வி வேட்பிக்கப் பத்தாம்பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையுங் காணாராயினார்” (பதிற். 3-ஆம் பத்தின் இறுதிக்கட்டுரை) என்பதனாலும், “பாடாண்டிணையே” (தொல். புறத்திணை, சூ. 25, ந.) என்பதன் விசேடவுரையாலும், “சேரன் குட்டுவன்புகழைச் செய்யுளாகத் தொடுத்த கௌதமனென்னும் பெரிய புலவன், ‘யானும் என்சுற்றமும் துறக்கம் புகும்படி பொருந்திய அறங்களை முடித்துத் துறக்கத்தைத்தா’ என்றாற்கு, அவன் சொற்குறை தீர்ப்பான்பொருட்டு உவந்து யாகங்களை நடத்தி, “நீ வேண்டிய துறக்கத்தின்கண் நீடு வாழ்வாயாக’ என்றான்; ஆதலால் புனைந்து இப்பெற்றியாரென்று புகழவேண்டுவதில்லை; இயற்கையாகக் கொடுக்கும் சீலத்தார் தம் அளவினாற் கொடுக்க வல்லதனைத் தாமே அறிந்துகொடுப்பார்” (பழ. 316, பழையவுரை) என்பதனாலும் உணர்க.