/ Tamil Pulvarkal / கோப்பெருஞ்சோழன்

கோப்பெருஞ்சோழன்

  • “செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே, ஐய மறாஅர் கசடீண்டு காட்சி, நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே”, ”பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே, செல்வக்காலை நிற்பினும், அல்லற் காலை நில்லலன்” என்பவை இந்நூலுள் இவன் பாடல்களிற் சிறந்த பகுதிகள். இவனாற் பாடப்பட்டோர் பிசிராந்தையார். இவனியற்றிய பாடல்கள்: குறுந். 4; புறநா. 3. இவனுடைய பிற வரலாற்றைப் பாடப்பட்டோர் வரிசையிற் காண்க.

  • இவனுடைய இராசதானி உறையூர்; பிசிராந்தையார்க்கும் பொத்தியார்க்கும் உயிர் நண்பன்; இவன் தன் பிள்ளைகள் இருவரோடு பகைமைகொண்டு போர்செய்தற்கு எழுந்த பொழுது புல்லாற்றூர் எயிற்றியனாராற் சமாதானம் செய்யப்பட்டான். செய்யுள் செய்தலில் வல்லவன்; இவன், பின்பு எல்லாவற்றையுந் துறந்து வடக்கிருந்து, உடன் உயிர் நீத்தற்குவந்த பொத்தியாரை, ‘மகன் பிறந்த பின் வருக‘ எனக் கூறித் தான் உயிர்நீத்துக் கல்லாகியும், அவ்வாறு வந்த அவருக்கு இடங்கொடுத்துப் புகழ்பெற்றுவிளங்கினான்; இவன் வடக்கிருந்ததைக் கேட்டு வந்த பிசிராந்தையாரும் உடன் உயிர் நீத்தனர்; இதனை, “புணர்ச்சி பழகுதல் வேண்டா” என்னும் திருக்குறளுக்குப் பரிமேலழகரெழுதிய விசேடவுரை யாலும், “தோழிதாயே” (தொல். கற்பு. சூ, 52) என்பதனுரையாலுமுணர்க. இவன் இளஞ் சேரலிரும்பொறையால் வெல்லப்பட்டான் போலும் (பதிற். 9-ஆம் பத்தின் பதிகம்) . இவனைப் பாடிய புலவர்: பிசிராந்தையார், புல்லாற்றூரெயிற்றியனார், பொத்தியார், கரூவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார்; இவ்வரசனும் இப்புலவர்களும் அவ்வச்சமயத்துக் கூறிய பாடல்கள் மிக அற்புதமானவை.