/ Tamil Pulvarkal
/ கோவூர்கிழார்
கோவூர்கிழார்
- இவர் வேளாண்மரபினர்; சோழ பரம்பரையோரால் ஆதரிக்கப்பெற்றவர்; நன்றியுள்ளவர்; பிறருடைய சீற்றத்தைத் தணித்தலிற் கண்ணுங் கருத்துமாக விருந்து வாழ்ந்தவர்; யாரும் மன ஒற்றுமையுடன் இருக்கவேண்டுமென்பது இவரது கொள்கை. கனாநூல், சோதிடநூல், இசைநூல் என்பவற்றில் வல்லுநர்; உவமை கூறுதலிலும் உபகாரிகளின் குணங்களைப் பாராட்டுதலிலும் வீரச் செயல்களை விளக்குதலிலும் மிக்க ஆற்றல் வாய்ந்தவர்; அஞ்சாத நெஞ்சினர். இவை இவருடைய பாடற்பகுதி களால் விளங்கும். சோழர்களுள், நலங்கிள்ளி யென்பவன் ஒருகாலத்தில் ஆவூரையும் ஒருகாலத்தில் உறையூரையும் முற்றியிருந்தபொழுது அவ்வக்காலத்தில் அடைத்துக்கொண்டு அந்நகரங்களுக்குள்ளே அஞ்சியிருந்த நெடுங்கிள்ளியை நோக்கி, ‘வெளியேவந்து போர்செய்தல், ஒற்றுமையுடன் வாழ்தல் இந்த இரண்டனுள் ஒன்றைச் செய்து கொள்க’ என்று இடித்துக்கூறிய பகுதியும் (44-5) , நலங்கிள்ளி யிடத்திருந்து உறையூர்க்கு வந்த இளந்தத்தனென்னும் புலவனை ஒற்று வந்தானென்று நெடுங்கிள்ளி கொல்லத் தொடங்கிய விடத்து அப்புலவனை உய்வித்தற்பொருட்டுப் பொதுவாகப் புலவர்களின் இயல்பை விதந்து கூறிய பகுதியும் (47) , மலையமான் மக்களைக் கிள்ளிவளவன் யானைக்கு இடத்துணிந்தபொழுது அவர்களை உய்விக்கவும் அவனுடைய மனத்தைக் கனிவிக்கவும் எண்ணிச் சிறுவர்களின் இயல்பை எடுத்துக்கூறிய பகுதியும் (46) இவருடைய ஆற்றலையும் அருமைக் குணங்களையும் புலப்படுத்தும். “சிறப்புடை மரபிற் பொருளுமின்பமும், அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல, இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை”, “போரெனிற் புகலும் புனைகழன் மறவர்”, “ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும், செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை”, ‘காலனுங் காலம் பார்க்கும் பாராது, வேலீண்டு தானை விழுமியோர் தொலைய, வேண்டித் தடூஉம் வெல்போர் வேந்தே”, “மையல் கொண்ட வேமமி லிருக்கையர், புதல்வர் பூங்கண் முத்தி மனையோட், கெவ்வங் கரக்கும் பைதன் மாக்களொடு, பெருங்கலக் குற்றன்றாற் றானே காற்றோ, டெரிநிகழ்ந் தன்ன செலவிற், செருமிகு வளவநிற் சினைஇயோர் நாடே”, “உடும்புரித் தன்ன வென்பெழு மருங்கிற், கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது, சில்செவித் தாகிய கேள்வி நொந்து நொந்து”, “மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின், ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை, புனிறுதீர் குழவிக் கிலிற்று முலைபோலச், சுரந்த காவிரி மரங்கொன் மலிநீர், மன்பதை புரக்கு நன்னாட்டுப் பொருநன்”, “யானை, நெடுநகர் வரைப்பிற் படுமுழா வோர்க்கும், உறந்தையோனே குருசில், பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே”, “தைஇத் திங்கட் டண்கயம் போலக், கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர், அடதீ யல்லது சுடுதீ யறியா, திருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்”, “நிறனுற்ற வராப்போலும் வறன்”, “வெய்துண்ட வியர்ப்பல்லது, செய்தொழிலான் வியர்ப்பறியாமை, ஈத்தோ னெந்தை” என்பவை இவருடைய
- பாடல்களுட் சிறந்த பகுதிகள். இவராற் பாடப்பட்டோரும் இவர் காலத்தவரும் : சோழன் நலங்கிள்ளி, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன், சிறுகுடிகிழான் பண்ணனென்போரும் அவர்களைப்பாடிய புலவர்களும் ஆவார். இவர் இயற்றிய பாடல்கள்-18. குறுந். 1; திருவள். 1; நற். 1; புறநா. 15.