/ Tamil Pulvarkal
/ சிறுகுடிகிழான் …
சிறுகுடிகிழான் பண்ணன்
-
- இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுடைய நண்பருள் ஒருவன்; சிறந்தகொடையாளி; “தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன், பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப், புன்காழ் நெல்லிப் பைங்காய்”என அகநானூற்று 54-ஆம் பாட்டிலும் இவன் பாராட்டப்பட்டிருத்தல் காண்க. இவன் பெயர் பண்ணனெனவும் வழங்கும். இவனைப் பாடியவர்கள்: கோவூர்கிழார், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்.