/ Tamil Pulvarkal
/ சோழன் …
சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி
-
- இவன் சிறந்த வீரன். இவனைப் பாடிய புலவர் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார். காலேகப்பள்ளியெனவும் பிரதிபேத முண்டு.
சோழன் உருவப்பஃறேரிளஞ் சேட்சென்னி
- இவன் சோழன் கரிகாற் பெருவளத்தான் தந்தை; அழுந்தூர் வேளிடை மகட்கொண்டோன். இதனை, “மன்னர்பாங்கின்” (தொல். அகத்திணை. சூ. 30, ந.) என்பதன் உரையாலுணர்க; “உருவப்பஃறே ரிளையோன் சிறுவன்” (130) என்றார் பொருநராற்றுப்படையிலும்; வீரத்திலும் கொடையிலும் சிறந்தோன். இவன் பெயர் இளையோனெனவும் வழங்கும். இவனைப் பாடிய புலவர்கள்; பரணர், பெருங்குன்றூர்கிழார்.