/ Tamil Pulvarkal
/ சேரமான் …
சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை
- இவன், தன் முரசுகட்டிலின்மேல் அறியாமல் ஏறித் துயின்ற மோசிகீரனாரைத் துன்பஞ் செய்யாமல் அவன் எழுமளவும் கவரிகொண்டு வீசியதனால் அவராற் புகழ்ந்து பாடப்பெற்றான். பதிற்றுப்பத்துள் எட்டாம்பத்திற்குத் தலைவன் இவனே. அதுபாடிய அரிசில்கிழார்க்கு ஒன்பதுநூறாயிரங் காணம் பரிசில் கொடுத்தான்; அதியமானுடைய தகடூரை வென்றான்; தகடூர் யாத்திரை யென்னும நூல் இவன் காலத்துச் செயயப்பட்டது போலும்.