/ Tamil Pulvarkal
/ சேரமான் …
சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
- இவன் அரசர்களுக்கு இன்றியமையாத குணங்கள்பலவும் நிறைந்தவன்; சோழபரம்பரையிற் பிறந்தவன், ஒரு காலத்துச் சேரமானுடைய பாமுளூரை வென்று கைக்கொண்டான். இதனாலேயே இவனுக்கு இப்பெயர் வந்தது; இரப்போரைப் பாதுகாத்தலையே விரதமாக வுடையவன்; இவன் பெயர் சோழன்நெய்தலங்கான லிளஞ்சேட்சென்னி யெனவும் வழங்கும். சேரமான் பாமுளூரென்பதற்குச் சேரமானுடைய பாமுளூரென்று பொருள்கொள்க. இவனைப் பாடிய புலவர் ஊன் பொதி பசுங்குடையார்.