/ Tamil Pulvarkal
/ சேரமான் …
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்
- இவன், பாரதப் போரிற் பாண்டவர் துரியோதனாதியரென்னும் இருவகையார் சேனைக்கும் உணவளித்தான். இவ்வரலாற்றை, “ஓரைவ ரீரைம் பதின்ம ருடன் றெழுந்த, போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த, சேரன்பொறையன் மலையன் றிறம்பாடிக், கார்செய் குழலாட வாடாமோ வூசல், கடம்பெறிந்த வாபாடி யாடாமோ வூசல்” என்னும் சிலப்பதிகார வாழ்த்துக் காதைச் செய்யுளும் புலப்படுத்தும், இதனாலேயே இவன் இப்பெயர் பெற்றான். இவனைப் பாடிய புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர்.