/ Tamil Pulvarkal
/ சோணாட்டுப் …
சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான்கௌணியன் விண்ணந்தாயன்
- பூஞ்சாற்றூரென்பது முடிகொண்டானாற்றங்கரையிலுள்ளது; இவன் அந்தணர்திலகன்; கௌண்டின்னிய கோத்திரத்திற் பிறந்தோன்; ஓதல் முதலிய அறுவகைத்தொழிலிலும் சிறந்து பார்ப்பனவாகை பெற்றோன்; மிக்க கொடையாளி; இவனைப் பாடிய புலவர் ஆவூர் மூலங்கிழார். பூஞ்சிற்றூரென்று சில பிரதிகளிற் காணப்படுகின்றது.