/ Tamil Pulvarkal
/ சோழன் …
சோழன் நலங்கிள்ளி
- இவன் பகைவரை அஞ்சாது, வெல்லும் ஆற்றலுடையவனென்றும் பொதுமகளிரைச் சிறிதும் விரும்பாதவனென்றும் இரப்போர்க்கு எவற்றையும் வரையாதுகொடுக்கும் வள்ளலென்றும் செங்கோலை உடையவனென்றும் இவன்பாடிய பாடல்கள் தெரிவிக்கின்றன. இவனுடைய மற்ற வரலாற்றைப் பாடப்பட்டோர் பெயர் வரிசையிற் காண்க. இவன் இயற்றிய பாடல்கள் புறநானூற்றில் இரண்டு.
சோழன் நலங்கிள்ளி
- இவன் கவிசெய்தலில் வல்லவன்; பாண்டிய நாட்டிலிருந்த ஏழரண்களை அழித்துக் கைக்கொண்டு அவற்றில் தனது புலிக்கொடியை நாட்டினான்; தன் தாயத்தாரோடு பகைத்து அவர்கள் இருந்த ஆவூரையும் உறையூரையும் முற்றுகை செய்தான்; மாவளத்தானென்ப வனுக்குத் தமையன்; இவனுக்குச் சேட் சென்னியென்றும் புட்பகையென்றும் தேர்வண்கிள்ளியென்றும் பெயருண்டு; நெடுங்கிள்ளி யென்பவனோடு பகைமையுடையோன்; முன்னர், போர்செய்து வெற்றி கொள்ளுதலையே பொருளாகக் கொண்டிருந்த இவன் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சொல்லாற் பின்பு அதனைத் துறந்து அறஞ்செய்தலையே மேற்கொண்டான்; இவனைப் பாடிய புலவர்கள்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர்கிழார், ஆலத்தூர்கிழார்.