/ Tamil Pulvarkal
/ தண்காற் …
தண்காற் பூட்கொல்லனார்
-
- தண்கால் - பாண்டி நாட்டிலுள்ளதோரூர்; திருத்தண்காலென இக்காலத்து வழங்கும்; இது திருமாலின் நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. பூண் கொல்லனார் - ஆபரணஞ் செய்யுந் தட்டார்; இவருக்கு இப்பெயர் ஊராலும் தொழிலாலும் வந்தது. இப்பெயர், தங்கால் தாட்கோவலனாரெனவும் தங்கால் பூட்கோவலனார் எனவும் காணப்படுகின்றது. இவர் பாடலில் இல்லறவொழுக்கம் நன்கு கூறப்பட்டுள்ளது.