/ Tamil Pulvarkal
/ தாயங்கண்ணனார்
தாயங்கண்ணனார்
- எருக்காட்டூர்த் தாயங்கண்ணனாரென்ற புலவரும் இவரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை. இவருடைய பாட்டில், மயானத்தின் இயல்பும் அதன் தொன்மையும் விளங்கக் கூறப்பெற்றுள்ளன; “நெஞ்சமர் காதல ரழுத கண்ணீர், என்புபடு சுடலை வெண்ணீ றவிப்ப, எல்லார் புறனுந் தான்கண் டுலகத்து, மன்பதைக் கெல்லாந் தானாய்த், தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே” (புறநா. 356 : 5-9) என்பதைப் பார்க்க; “முன்புறந் தான்காணு மிவ்வுலகை யிவ்வுலகிற், றன்புறங் கண்டறிவார் தாமில்லை - அன்பின், அழுதார்கணீர்விடுத்த வாறாடிக் கூகை, கழுதார்ந் திரவழங்குங் காடு” (பு. வெ.) என்னும் காடு வாழ்த்து மேற்கூறிய பகுதியை ஒத்து விளங்குதல் காண்க. இவர் பெயர் கதையங்கண்ணனா ரெனவும் பிரதியிற் காணப்படுகின்றது.