/ Tamil Pulvarkal / தொண்டைமான் …

தொண்டைமான் இளந்திரையன்

    • இவன் காஞ்சிநகரத்திருந்த ஓரரசன்; பாடுதலில் வல்லவன்; கடியலுார் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப் படைத்தலைவன் இவனே; இவன் பெயர்க் காரணத்தைப் பெரும்பாணாற்றுப்படை, 37-ஆம் அடியின் விசேடவுரையால் உணர்க. இவன் காலத்துப் புலவர் மேற்கூறிய உருத்திரங் கண்ணனாரும் நக்கண்ணையாருமாவார்.

தொண்டைமான்

  • இவன் காஞ்சி நகரத்திருந்த ஓரரசன்; அதியமான் நெடுமானஞ்சி காலமும் இவன் காலமும் ஒன்றே; இவன் காலத்தவர் ஒளவையார். இவன் தொண்டைமான் இளந்திரையனென்றும் வழங்கப் பெறுவன்; பெரும்பாணாற்றுப்படைக்குத் தலைவன் இவனே; இவனுடைய பிறப்பின் வரலாறு அந்நூல், 29-31-ஆம் அடிகளால் அறியலாகும்; அதில் நாககன்னியென்றது, பீலிவளையையே என்றும் (மணி. 24 : 57) அதற்குத் தக்க ஆதாரம் சாசனத்திலும் நூல்களிலுமுள்ளதென்றும் சொல்லுகின்றனர்; இவன் முடியுடை மன்னர் மூவரோடு சேர்த்து எண்ணப்படும் பெருமை வாய்ந்தவனேனும், “வில்லும் வேலும்” (தொல். மரபு. சூ. 83) என்பதன் உரையில், ‘மன்பெறு மரபி னேனோரெனப்படுவார், அரசுபெறு மரபிற் குறுநில மன்னரெனக் கொள்க; அவை பெரும்பாணாற்றுள்ளும் பிறவற்றுள்ளுங் காணப்படும்’ எனப் பேராசிரியர் எழுதியிருத்தலால், இவனைக் குறுநிலமன்னனாகப் பண்டையோர் கொண்டிருந்தனரென்று தெரிகின்றது. இப்பெயர் இளந்திரையனெனவும் திரையனெனவும நூல்களில் வழங்கும். இவனியற்றிய பாடல்களாக நற்றிணையில் மூன்றும் இந்நூலில் ஒன்றும் காணப்படுதலால், இவன் நல்லிசைப்புலவர் வரிசையிற் சேர்ந்த பெருமை வாய்ந்தவனென்றும் தெரிகின்றது. இளந்திரையமென ஒரு நூல்
  • இவனாற் செய்விக்கப் பெற்றதென்று இறையனாரகப் பொருளுரை, நன்னூல் மயிலைநாதருரை முதலியன தெரிவிக்கின்றன; நன்னூல் மயிலை நாதருரையில் (சூ. 372) திரையனாற் செய்யப்பட்ட ஊர் திரையனது ஊரென்றுபொருள் செய்திருத்தலின், இப்பெயருள்ள ஊரொன்று பண்டைக்காலத்தில் இவனாலோ பிறராலோ நிருமிக்கப்பெற்றிருந்ததாகத் தெரிகின்றது. “வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர், இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட், டோங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர்” (அகநா. 213) , “பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ, பாவீற் றிருந்த புலவிர்காள் பாடுகோ, ஞாயிற் றொளியான் மதிநிழற்றே தொண்டையார், கோவீற் றிருந்த குடை”, “வஞ்சி வெளிய குருகெல்லாம் பஞ்சவன், நான்மாடக் கூடலிற் கல்வலிது, சோழனுறந்தைக் கரும்பினிது தொண்டைமான், கச்சியிற் காக்கை கரிது”, ”ஆழி யிழைப்பைப் பகல்போ மிரவெல்லாம், தோழி துணையாத் துயர் தீரும் - வாழி, நறுமாலை தாராய் திரையவோஓ வென்னும், செறுமாலை சென்றடைந்த போது” (யா. வி. மேற்.) என்பவற்றால், இவன் பரம்பரையோருடைய பெருமைகள் புலப்படும்.