/ Tamil Pulvarkal
/ நரிவெரூஉத்தலையா …
நரிவெரூஉத்தலையார்
- இவர், யாதுகாரணத்தாலோ தம் உடம்பு வேறுபட்டிருந்து சேரமான் கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ்சேரலி ரும்பொறையைக் கண்டநாளில் அவ்வேறுபாடு நீங்கித் தம் உடம்பு பெற்றனர். இது, புறநானூற்றின் 5-ஆம் பாட்டின் பின்புள்ள வாக்கியத்தாலும், “புதுமை பெருமை” (தொல். மெய்ப். சூ. 7, பேர்.) என்பதன் விசேடவுரையாலும் விளங்கும். இவராற் பாடப்பட்டோன் : மேற்கூறிய சேரமான் கருவூரேறிய ஒள்வாட்கோப்ரெுஞ்சேரலிரும்பொறை. இவர் இயற்றிய பாடல்கள் குறுந்தொகையிலும் திருவள்ளுவமாலையிலும் உள்ளன.