/ Tamil Pulvarkal
/ கண்டீரக்கோப்பெர …
கண்டீரக்கோப்பெரு நள்ளி
-
- .இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்; தோட்டியென்னும் மலைக்கும் அதனைச் சாரந்த மலைநாட்டிற்கும் காட்டுநாட்டிற்கும் தலைவன்; “கரவாது, நட்டோ ருவப்ப நடைப் பரிகாரம், முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத், துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு, நளிமலை நாட னள்ளியும்” (103 - 7) எனச் சிறுபாணாற்றுப்படையிலும் இவனைப் புகழ்ந்து கூறினர்; இவன் பெயர் கண்டிற்கோப்பெருநள்ளி யெனவும், நள்ளி யெனவும், கண்டிற்கோப்பெருநற் கிள்ளியெனவும் பிரதிகளிற் காணப்படும். இவனைப் பாடிய புலவர்: வன்பரணர், பெருந்தலைச்சாத்தனார்.
நள்ளி
- இவன் கடையெழுவள்ளல்களில் ஒருவன்; இரப்போர்க்கு இழையணி நெடுந்தேர் களிற்றொடும் ஈவோன்; (அகநா. 237) . கண்டீரக்கோப்பெருநள்ளியென்னும் பெயரைப் பார்க்க. பாண்டிநாட்டில் நள்ளியென ஓரூர் உள்ளது.
நள்ளி
- இவன் கடையெழுவள்ளல்களில் ஒருவன்; இரப்போர்க்கு இழையணி நெடுந்தேர் களிற்றொடும் ஈவோன்; (அகநா. 237) . கண்டீரக்கோப்பெருநள்ளியென்னும் பெயரைப் பார்க்க. பாண்டிநாட்டில் நள்ளியென ஓரூர் உள்ளது.