/ Tamil Pulvarkal / மதுரை மருதனிள …

மதுரை மருதனிள நாகனார்

    • இவராற் பாடப்பட்டோன், பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்; இவர் பாடலில், திரி புரவிசயமும், திருச்செந்தூரில் முருகக்கடவுள் எழுந்தருளிய துறைக் கண்ணுள்ள மணற்குவியல்களும் பாராட்டப்பெற்றுள்ளன. இறையனாரகப் பொருளுக்கு நல்லுரையியற்றியவர்களுள் இவருமொருவர். ‘உருத்திரசன்மன். . . . எல்லாரும் முறையே உரைப்பப் கேட்டு வாளாவிருந்து மதுரை மருதனிளநாகனார் உரைத்த விடத்து ஒரோவழிக் கண்ணீர்வார்ந்து மெய்ம்மயிர் நிறுத்தி…….இருந்தான்’ (இறை. முதற் சூத்திரவுரை) என்பதனால், அவ்வுரையின் பெருமை விளங்கும். இவர் பாடல்கள் ஏனைத் தொகைகளிலும் (அகநா. குறுந். நா.) காணப்படுகின்றன.

வெள்ளைக்குடி நாகனார்

  • வெள்ளைக்குடி யென்பது ஓரூர். இவர் தம்முடைய பழைய நிலங்களுக்குரிய வரிப்பணத்தைச் செலுத்துதற்கு ஆற்றாதவராகிச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனுக்குச் செவியறிவுறுத்தி அச்செய்களை 1முற்றூட்டாகப் பெற்றனர். இன்னும் இவர்வாக்காக நற்றிணையில் இரண்டு பாடல்கள் உள்ளன. வெள்ளைமாளர்
  • இவர் பாடிய ஏறாண்முல்லைத்துறை மிக்க பொருள் நயமுடையது.