/ Tamil Pulvarkal
/ பாரதம்பாடிய …
பாரதம்பாடிய பெருந்தேவனார்
- பெருந்தேவனார் என்பது இவரது இயற்பெயர். இவர் தொண்டைநாட்டினர்; தமிழில் பாரதகதையை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்றிய ஆசிரியர்; அந்நூற் செய்யுட்கள் தொல்காப்பியப் பொருளதிகாரம் நச்சினார்க்கினியத்திலும் யாப்பருங்கலவிருத்தி முதலியவற்றிலும் காணப்படும். இவர் கடைச்சங்கப் புலவருள் ஒருவர். நற்றிணை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்பவற்றிலுள்ள கடவுள்வாழ்த்துக்களும், திருவள்ளுவமாலையிலுள்ள, ‘எப்பொருளும் யாரும்’ என்னும் வெண்பாவும் இவராலேயே செய்யப்பட்டுள்ளன. இவருடைய மற்ற வரலாறுகளை ஐங்குறுநூற்றிற் பாடினோர் வரலாற்றிற் காண்க.