/ Tamil Pulvarkal
/ பாரி
பாரி
- இவன் கடையெழுவள்ளல்களிலொருவன்; முந்நூறு ஊரையுடைய பறம்பு நாட்டிற்கும் பறம்பு மலைக்கும் தலைவன்; முல்லைக்கொடிக்குத் தேர்கொடுத்தோன்; இவற்றை “சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய, பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற், பறம்பிற் கோமான் பாரியும்” (89 - 91) என்னும் சிறுபாணாற்றுப்படையால் உணர்க. தன்னுடைய முந்நூறு ஊரையும், மற்றைப்பொருள்கள் எல்லாவற்றையும் பரிசிலர்க்குக் கொடுத்தோன்; மிக்க பராக்கிரமமுடையவன். இவனை வெல்லக் கருதிய தமிழ்நாட்டுவேந்தர் மூவரும் போரில் வெல்ல வொண்ணாமையின் வஞ்சித்துக்கொன்றனர். இவன் இறந்தபின்பு இவன் நண்பராகிய கபிலர் சென்று இவன் மகளிரை மணஞ்செய்துகொள்ளும்படி விச்சிக்கோனையும், இருங்கோவேளையும் வேண்டுகையில் அவர்கள் மறுப்ப. அம் மகளிரைப் பார்ப்பாருக்கு மணம்புரிவித்தனர். இவனைப்பற்றி அவ்வச் சமயங்களிற் கபிலர் பாடிய செய்யுட்களை ஊன்றிப்படிப்பின் யாரும் மனமுருகாதிரார். சைவ சமயாசாரியருள் ஒருவராகிய ஸ்ரீ சுந்தரமூர்த்திநாயனார், “கொடுக்கிலாதானைப் பாரியேயென்று கூறினுங் கொடுப்பாரிலை” என்று அருளிச் செய்திருத்தலின் இவன் அவர்காலத்துக்கு முந்தியவனாதல்வேண்டும். இவன் மலைச்சுனை புலவர் பலராலும் புகழப்பட்டுள்ளது. “பலாஅம் பழுத்த” (பதிற். 11) என்பதிலும் இவன் பாராட்டப்பெற்றுள்ளான். இவன் பெயர் வேள்பாரியெனவும் வழங்கும். இவனைப் பாடியவர்: கபிலர், இவன் மகளிர் முதலியோர். இவன் இறந்த பின்பும் இருந்த புலவர்; புறத்திணை நன்னாகனார், கபிலர் முதலியோர்.