/ Tamil Pulvarkal
/ ஒல்லையூர்கிழான் …
ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன்
-
- இவன் வீரர்க்கும் பாணர்க்கும் விறலியர்க்கும் பேருதவி புரிந்தோன்; வலியவீரன்; இவன் இறந்த பின்பு பிரிவாற்றாது பாடிய புலவர்: குடவாயிற்கீரத்தனார், தொடித்தலை விழுத்தண்டினார். இவன்பெயர் சாத்தனெனவும் வழங்கும்.
சோழநாட்டுப் பிடவூர்கிழார்மகன் பெருஞ்சாத்தன்
- இவன் வேளாளரில் உழுவித்துண்போன்; முடியுடைவேந்தற்குமகட்கொடை நேர்தற்கு உரியோன் (தொல். அகத்திணை. சூ. 30. ந.) இவனைப் பாடிய புலவர் மதுரை நக்கீரர்.