/ Tamil Pulvarkal
/ பேய்மகள் …
பேய்மகள் இளவெயினி
- பேய்மகள் - தேவராட்டி; பூசாரிச்சி; பேயினது ஆவேசமுற்றவள். இந்த வகையார் இக்காலத்தும் அங்கங்கே உள்ளார். இப்பாட்டின் விசேடவுரையால், பேயே ஒரு மகள் வடிவங்கொண்டு பாடினாளென்று இந்நூலின் பழைய உரையாசிரியர் கருதியதாகத் தெரிகிறது. எயினி - எயினக்குலத்திற் பிறந்த மங்கை, வஞ்சி நகரின் வளமும் தலைவன் கொடையும் இவர் பாடலிற் கூறப்றெ்றுள்ளன. இவராற் பாடப்பெற்றோன் சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ.