/ Tamil Pulvarkal
/ மதுரைப் …
மதுரைப் பேராலவாயார்
-
- சொக்கநாதக் கடவுள், ஒரு புலவராக வந்து சங்கப்புலவருடைய வழக்கை விடுவித்தபொழுது முதலில் அவர் பெயராக அமைந்திருந்த இப்பெயர் (திருவால. 15 : 13 - 9) , பின்பு அவர்களுள் ஒருவராகிய இவருக்கு இடப்பட்டு வழங்கலாயிற்று; ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் காலத்தினர் இவர். அவன் இறந்தபின்பு தானும் இறத்தற்குத் தீயிற் பாயும் அவன் மனைவியின் நிலைமையைப் பார்த்து இவர் கூறிய பாடல் (247) யாருடைய மனத்தையும் நெகிழ்விக்கும். இன்னும் இவர் செய்த பாடல்கள் ஏனைத்தொகைகளிலும் உண்டு; அகநா. நற்.