/ Tamil Pulvarkal
/ பொத்தியார்
பொத்தியார்
- இவர் கோப்பெருஞ்சோழனுடைய உயிர்த்தோழர்; இவருடைய ஊர் உறையூர்; அவன் வடக்கிருத்தற்குச் செல்லும்பொழுது உடன் சென்று அங்கே பிசிராந்தையார் வரக்கண்டு வியந்து (217) , “நீர் பிள்ளையைப் பெற்றபின்பு ஈங்குவாரும்” (222) என்று அவன் சொல்லக் கேட்டு மீண்டுவந்து உறையூர் புகுந்து அவனுடைய பிரிவாற்றாமல் வருந்திச் (220) சிலநாள் இருந்து, புதல்வன் பிறந்தபின் சென்று அவன் நடுகற் கண்டு வருந்தி ‘எனக்கு இடந்தா’ என்று கேட்டு அவன் இடங் கொடுக்கப்பெற்று வியப்புற்று அவனைப் பாடித் (221-3) தாமும் வடக்கிருந்து உயிர் நீத்தனர், அவனது பிரிவாற்றாமையால் இவர் அடைந்த வருத்தங்களும் அவனுடைய அருமைக் குணங்களும் இவருடைய செய்யுட்களால் விளங்கும். ‘கோப்பெருஞ் சோழன் துறந்துழிப் பிசிராந்தையாரும் பொத்தியாரும் போல்வார் துறந்தாரென்று கூறும் புறச்செய்யுட்கள் உதாரணம்’ (தொல். கற்பு. சூ. 53, ந.) என்பது இச்சரிதத்தைத் தெரிவிக்கின்றது. இவராற் பாடப்பட்டோர்; கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையாரென்பார்.