/ Tamil Pulvarkal / பொன்முடியார்

பொன்முடியார்

  • இவர் சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையின் காலத்தவர்; தகடூர்யாத்திரை யென்னும் நூலில் இவராற் செய்யப்பட்ட சில செய்யுட்களுமுள்ளன; தொல். புறத்திணை சூ. 8, 12, ந. இவருடனிருந்த புலவர்; அரிசில்கிழார். இவராற் பாடப்பட்டோன் அதியமான் நெடுமானஞ்சி. திருவள்ளுவமாலையிலும் இவர் பெயரோடுள்ள செய்யுளொன்று காணப்படுகின்றது. மறக்குடியிற் பிறந்த முதியவள் கூற்றாக இவர்கூறிய, “ஈன்று புறந் தருதலென்றலைக் கடனே, சான்றோ னாக்குத றந்தைக்குக் கடனே, வேல்வடித்துக்கொடுத்தல் கொல்லற்குக் கடனே, நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே, ஒளிறுவா ளருஞ்சம முருக்கிக், களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” (312) என்னும் பாடலால், ஒவ்வொருவருக்குமுரிய கடப்பாடுகள் இவை
  • என்பது விளங்கும்; இவர் கூறும் உவமை இனிமை வாய்ந்தது; இது, “சிற்றூரரசனுடையதும் உழுத்தஞ்சக்கையுண்டதும் அலங்காரமில்லாதுமான குதிரை, பகைவருடைய சேனையைக் கடலில் அலைகளைப் பிளந்து செல்லும் தோணியைப்போல விரைந்து அஞ்சாமல் செல்லாநின்றது. பெருஞ்செல்வத்தையுடைய அரசரின் நெய்விரவிய கவளத்தை உண்டனவும் மிக்க அலங்காரமுள்ளனவுமான குதிரைகள் முருகன் கோயிலில் கலந்தொடாத மகளிரைப் போலப் போரில் சும்மா நிற்கின்றன” (299) என்பதனால் விளங்கும்.