/ Tamil Pulvarkal
/ பொய்கையார்
பொய்கையார்
- இவருடைய ஊர் மலைநாட்டிலுள்ள தொண்டி யென்பது; 48. இவராற் பாடப்பட்டோன் சேரமான்கோக்கோதை மார்பன்; சேரமான் கணைக்காலிரும்பொறையின் அவைக்களத்துப் புலவராக விளங்கியவர்; மூவன் என்பவனை அச்சேரமான் வென்று அவனது பல்லைப் பிடுங்கித் தன்னுடைய தொண்டி நகரத்துக் கோட்டை வாயிற் கதவிலே அழுத்திவைத்த செய்தி இவர் பாடலில் வந்துள்ளது; நற். 18. அச்சேரமானைப் போரில் சோழன் செங்கணான் வென்று சிறையில் வைத்துவிட்டபொழுது சோழன்மீது களவழிநாற்பது என்னும் நூலைப் பாடி அச்சேரமானை மீட்ட பேரருளாளர்; “செய்கையரிய களவழிப்பா முன்செய்த, பொய்கை யொருவனாற் போந்தரமோ” (பழம்பாடல்) , “களவழிக்கவிதை பொய்கையுரை செய்ய வுதியன் கால் வழித்தளையை வெட்டியர சிட்டபரிசும்” (கலிங்க.) , “இன்னருளின், மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப், பாதத் தளைவிட்ட பார்த்திபனும்” (விக்கிரமசோழனுலா) , “பொறையனைப் பொய்கை கவிக்குக், கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோனும்” (குலோத்துங்க சோழனுலா) , “பொய்கை களவழி நாற்பதுக்கு, வில்லவன் காற்றளையை விட்டகோன்” (இராசராசசோழனுலா) என இச்செய்தி கூறப்பெற்றிருத்தல் காண்க. இவர் பாடியனவாக யாப்பருங்கலவிருத்தியிற் சில வெண்பாக்களும், பன்னிருபாட்டியலிற் சில சூத்திரங்களும் காணப்படுகின்றன. இவரே பொய்கையாழ்வாரென்பது சிலருடைய கொள்கை; ஆழ்வார்கள் மறந்தும் புறந்தொழாத பெரியாரென்பது வைஷ்ணவ சித்தாந்தமாதலால் அவர் வேறு, இவர் வேறென்று கொள்வதே மரபு.