/ Tamil Pulvarkal
/ மதுரை அறுவை …
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
- இவர் ஆடை விற்கும் வணிகர்; அறுவை - ஆடை. வேட்டனார் என்ற பெயர்க்காரணம் புலப்படவில்லை. “அரவுறை புற்றத் தற்றே நாளும், புலவர் புன்க ணோக்கா திரவலர்க், கருகா தீயும் வண்மை, உரைசானெடுந் தகை யோம்புமூரே” (329) என்பது இவருடைய பாடற்பகுதி; ஏனைத் தொகைகளிலும் (அகநா. குறுந். நற்.) , திருவள்ளுவமாலையிலும் இவர் பாடல்கள் காணப்படுகின்றன.