/ Tamil Pulvarkal
/ வடமவண்ணக்கன் …
வடமவண்ணக்கன் தாமோதரனார்
- வண்ணக்கன் - நாணய பரிசோதகன்; இப்பொருள் நீலகேசியுரையிற் கண்டது. நோட்டக்கார னென்னும் பெயர் இப்பொருளில் இக்காலத்து வழங்கப்படுகின்றது. தாமோதரனாரென்பது கடவுள்பெயரால்வந்த இவரது இயற்பெயர். இவர் வடதிசையிலிருந்து வந்தவராக எண்ணப்படுகிறார். இவராற் பாடப்பட்டோன் பிட்டங்கொற்றனென்பான்.