/ Tamil Pulvarkal
/ வெறிபாடிய …
வெறிபாடிய காமக்கண்ணியார்
- இவர் பெண்பாலார். காமக் கண்ணி (காமாக்ஷி) யென்பது காஞ்சிநகரத்திற் கோயில்கொண்டெழுந் தருளிய அம்பிகையின் திருநாமம். வெறியென்பது தெய்வமேறப்பெற்று ஒருத்தியாடுதல். இது வெறியாட்டமெனவும் வழங்கும்; இதன் இயல்பை நன்றாக விளக்கிப் பாடியிருத்தலால், ‘வெறிபாடிய’ என்னும் அடைமொழி இவர் பெயர்க்குமுன் சேர்க்கப்பெற்றது; அகநா. 22, 92; நற். 268. இவர் பெயர் வெறியாடிய காமக்கண்ணியாரெனவும் பிரதிகளிற் காணப்படுகின்றது. இவர் இந்நூலிற் பாடிய செருவிடைவீழ்தல், குதிரைமறமென்னுந் துறைப்பாடல்கள் அறிதற்பாலன.