/ Tamil Pulvarkal / வையாவிக் …

வையாவிக் கோப்பெரும் பேகன்

  • இவன், கடையெழு வள்ளல்களில் ஒருவன்; மலைநாட்டையுடையவன்; மயிற்பறவைக்குப் போர்வை கொடுத்தோன்; இவனது ஊர் நல்லூரென்பது; ஆவியர்குடியிற் பிறந்தவன். இதனை இவன் பெயராலும், சிறுபாணாற்றுப்படையாலும் உணர்க. தனக்குரியவளாகிய கண்ணகியென்பவளைத் துறந்ததனால், 1. வேளாளர் உழுவித்துண்போரும், உழுதுண்போருமென இரு வகையினர். அவருள், உழுவித்துண்போர் மண்டிலமாக்களும், தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும், அழுந்தூரும், நாங்கூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாரு முதலிய பதியிற்றோன்றி வேளெனவும், அரசெனவும் உரிமையெய்தினோரும், பாண்டிநாட்டுக் காவிதிப்பட்ட மெய்தினோரும், குறுமுடிக் குடிப் பிறந்தோர் முதலியோருமாய் முடியுடைவேந்தர்க்கு மகட்கொடைக்குரிய வேளாளராம்’ (தொல். அகத்திணை. சூ. 30, ந.)
  • ‘இவளை அங்கீகரித்துக்கொள்க’ என்று கபிலர் முதலிய புலவர்களால் இரந்து பாடப்பெற்றான்; “கண்ணகிகாரணமாக வையாவிக்கோப்பெரும் பேகனைப் பரணர்பாடிய கைக்கிளைவகைப் பாடாண்பாட்டு” (தொல். புறத்திணை. சூ. 35, ந.) “கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய, அருந்திறலணங்கிய னாவியர் பெருமகன், பெருங்க னாடன் பேகனும்” (85 - 7) என்றார் சிறுபாணாற்றுப்படையிலும். இவன் பெயர் பேகனெனவும் வழங்கும். இவனைப் பாடிய புலவர்கள்: பரணர், கபிலர், வன்பரணர், அரிசில்கிழார,் பெருங்குன்றூர்கிழார்.